132 ஆண்டுகால பழமையான சுரங்கம் மும்பை அரசு மருத்துவமனைக்கு அடியில் இருப்பதை கண்டுபிடித்த பொறியாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
மும்பையில் பரபரப்பாக இயங்கி வரும் அரசு மருத்துவமனை ஒன்றில் தண்ணீர் கசிந்து வருவதாக புகார் எழுந்தது. அந்த கட்டிடத்தை பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது அந்த மருத்துவமனைக்கு அடியில் ஒரு சுரங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த சுரங்கத்தில் செங்கற்களால் கட்டப்பட்ட தூண்கள் இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தனர். 1890ம் ஆண்டு இந்த கட்டிடம் கட்டப்பட்ட போது சுரங்கமும் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த மருத்துவமனை திறக்கப்பட்டபோது சுரங்கம் இருக்கும் தகவல் யாருக்குமே தெரியாத நிலையில் 132 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் இந்த சுரங்கம் இருப்பது தெரியவந்து உள்ளது.