நீட் தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து!

Filed under: இந்தியா |

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைகு நடைபெறும் “நீட்” நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் இன்று நடைபெற உள்ளது. இந்த தேர்வை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்தியா அளவில் 3,842 மையத்தில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். தமிழ்நாட்டில் 14 நகரத்தில் அமைத்துள்ள 238 தேர்வு மையத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு பிற்பகல் 2 மணிக்கு துவங்கி மாலை 5 மணி நடைபெறுகிறது. மேலும், மாணவர்கள் இரண்டரை மணி நேரம் முன்பு தேர்வு மையத்துக்கு செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில்; நீட் தேர்வில் இஇ ஐப் போலவே, மாணவர்களும் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி செய்யப்பட வேண்டும். மாணவர்கள் தேர்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன். மாணவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி தேர்வு எழுதுவதற்கு வாழ்த்துக்கள்

இவ்வாறு அமைச்சர் பதிவிட்டுள்ளார்.