ஜெர்மனியில் உள்ள டோனிஸ் இறைச்சி தொழிற்சாலையில் 1331 பேருக்கு கொரோன பாதிப்பு!

Filed under: உலகம் |

ஜெர்மனி நாட்டின் பிரபலமான டோனிஸ் இறைச்சி தொழிற்சாலையில் 1331 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் இருக்கும் இறைச்சித் தொழிற்சாலைகளில் அதிகமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தான் வேலை பார்கின்றன்ர். ஆனால், அவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் அங்கையே தங்க வைக்கின்றனர். இதனால், கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து பலருக்கு பரவ காரணமாக உள்ளது.

ஜெர்மனியின் ரீடா வைடன்ப்ரக் (Rheda-Wiedenbruck) பகுதியில் உள்ள டோனிஸ் இறைச்சித் தொழிற்சாலையில் உள்ள சிலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது.

தற்போது ஜெர்மனியின் ரீடா வைடன்ப்ரக் (Rheda-Wiedenbruck) இருக்கும் டோனிஸ் இறைச்சித் தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இதை தொடர்ந்து சென்ற வாரம் பரிசோதனை நடத்தப்பட்டன.

அதன் முடிவிக்கு பின் 600 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதன் எண்ணிக்கை 1331 ஆக அதிகாரியுள்ளது.