கொரோனா வார்டில் வேலை பார்த்த 7 செவிலியருக்கு வைரஸ் பாதிப்பு – அதிர்ச்சியில் மருத்துவமனை!

Filed under: தமிழகம் |

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் வேலை பார்த்த 7 செவிலியர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளது. அந்த மாவட்டத்தில் நேற்று வரை 243 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இந்த தருணத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்த 7 செவிலியர்கள் உள்பட 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அந்த மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் அந்த 21 நபர்களில் மும்பை, கேரளா, சென்னை, காஞ்சிபுரம் ஆகிய பகுதியில் இருந்து வந்துள்ளனர்.