19 வருடங்களுக்குப் பிறகு ரஜினி கமல் படங்கள்!

Filed under: சினிமா |

கடந்த 19 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரின் படங்கள் இப்போது ஒரே நேரத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன் லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்துவரும் நிலையில் தீபாவளிக்கு ரிலீசாக அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதே போல சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்த கமல்ஹாசனின் “இந்தியன் 2” திரைப்படம் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இத்திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி இரண்டு படங்களும் தீபாவளிக்கு ரிலீசானால் 19 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரின் படங்களும் ஒன்றாக ரிலீசாக வாய்ப்புள்ளது. கடைசியாக “சந்திரமுகி” படமும் “மும்பை எக்ஸ்பிரஸ்” படமும் ஒன்றாக ரிலீசாகின.