2 இயக்குனர்கள் படத்தின் ஷூட்டிங்கில் கமல்!

Filed under: சினிமா |

ஹெச் வினோத் “சதுரங்க வேட்டை,” “தீரன் அதிகாரம் ஒன்று” ஆகிய படங்களை இயக்கியவர். இவர் அடுத்து அஜீத்தை வைத்து தொடர்ச்சியாக “நேர்கொண்ட பார்வை,” “வலிமை” மற்றும் “துணிவு” ஆகிய படங்களை இயக்கினார். “துணிவு” திரைப்படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் ஷூட்டிங் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என சொல்லப்பட்டது.

இப்போது கமல்ஹாசன் முதலில் மணிரத்னம் படத்தை முடித்துவிட்டு அதன் பிறகு பிரபாஸ் நடிக்கும் “கல்கி” படத்தில் கவனம் செலுத்தவுள்ளாராம். அதன் பிறகு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதால் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு கமல் ஹெச் வினோத் படத்தை தொடங்க 2025ம் ஆண்டு ஆகிவிடக் கூடும் என சொல்லப்பட்டது. இதனால் ஹெச் வினோத் “தீரன் அதிகாரம் 2” திரைப்படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கமல் ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் ஆகிய இருவரின் படங்களிலும் மாறி மாறி நடிக்க உள்ளாராம். நீண்ட நாட்களுக்குப் பிறகு கமல்ஹாசன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளார்.