எஸ்பிஐ வங்கி இந்தியாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில் ஆவணங்கள் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
2016ம் ஆண்டு இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டபோது ரூ.2000 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர் கடந்த சில ஆண்டுகளாக புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த ரூ.2000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றுவதற்கான விதிமுறைகளை பல வங்கிகளும் அறிவித்துள்ளன. வங்கிகளில் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு ரூ.2000 நோட்டுகள் மட்டுமே மாற்ற முடியும் என்றும், அதற்கு ஆவணங்கள் தேவை என்றும் கூறப்பட்டது. தற்போது எஸ்பிஐ வங்கி கிளை வங்கிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற எந்த ஆவணமும் தேவையில்லை. ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.20,000 வரை இவ்வாறு ஆவணங்கள் இன்றி மாற்றிக் கொள்ள முடியும். இதனால் பணத்தை மாற்ற விரும்புபவர்கள் எந்த சிரமும் இன்றி எஸ்பிஐ வங்கிகளில் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்துள்ளது.