2024 லோக்சபா தேர்தலில் டோனி போட்டியிட வேண்டும் – சுப்ரமணிய சாமி!

Filed under: இந்தியா |

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோனி. இவர் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நேற்று டோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இவரின் இந்த பதிவுக்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் மிக வேதனையில் உறைந்தனர்.

இந்நிலையில் எம்.எஸ்.டோனி 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என எம்பி சுப்பிரமணிய சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்; டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவருடைய திறமையை வைத்து தடைகளை எதிர்த்து போராட முடியும். ஒரு அணியை வழிநடத்தும் அவருடைய தலைமை பொது வாழ்க்கையில் தேவை. அவர் 2024 லோக்சபா பொது தேர்தலில் போட்டியிட வேண்டும்.

மேலும், எம்.எஸ். டோனியை அடுத்து இந்தியா அணியின் ஆல் ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.