புதுடெல்லி: மத்திய அரசின் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மக்களவையில் நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று தாக்கல் செய்தார். அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:
* அந்திய செலாவணி கையிருப்பு அதிகரித்துள்ளது.
* சரக்கு மற்றும் சேவை வரி முறையை அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.
* அடுத்த நிதியாண்டில் வளர்ச்சி 8.5 சதவீதம் வரை இருக்கும்.
* இந்தாண்டு இறுதிக்குள் பணவீக்கம் 5 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும்.
* தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 50 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
* 6 கோடி கழிப்பறைகளை கட்ட இலக்கு நிர்ணயம்.
* அரசின் அனைத்து திட்டங்களும் வறுமை ஒழிப்பை மையமாகக் கொண்டிருக்குதம்.
* அனைவருக்கும் மின்சாரம் மற்றும் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை
2022ல் அனைவருக்கும் வீடு
* 2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை நிறைவேற்ற முயற்சி.
* 5 சதவிகிதத்திற்கு கீழ் சில்லரை விற்பனை பண வீக்கம் நீடிக்கும்.
* வாக்களித்த மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது.
6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்
* நடப்பு பற்றாக்குறை 1 சதவிகிதத்திற்கும் குறைவாக உள்ளது.
* மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதமாக உயரும்.
* உலகின் 2வது மிகப்பெரிய பங்குச் சந்தையாக இந்தியா உள்ளது.
* உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
* இந்தியாவில் 6 கோடி கழிவறைகள் அமைக்க திட்டம்.
* இந்தியாவை தூய்மையாக தேசமாக மாற்ற தூய்மை இந்திய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பு
* நடப்பு கணக்கு பற்றாக்குறை ஒரு சதவிகிதத்திற்கு கீழ் குறையும்.
* நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் பங்களிப்பும் இருக்கும்.
* பொருளாதார வளர்ச்சிக்காக 9 மாதங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
100 நாள் வேலை திட்டம் தொடரும்
* 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற திட்டங்கள் தொடரும்.
* மத்திய அரசின் இலக்குக்கள் 75வது சுதந்திர தினத்திற்குள் எட்டப்படும்.
* பொது முதலீட்டை 1.25 லட்சம் கோடியாக அதிகரிக்க நடவடிக்கை
* வடகிழக்கு மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியுள்ளன.
ஜன் தன் வங்கி கணக்கு சாதனை
* ஜன் தன் வங்கி கணக்கு திட்டத்தில் மத்திய அரசு மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளது.
* வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை பட்ஜெட்டில் அறிவிக்க உள்ளேன்.
* சாலை கட்டமைப்பை மேம்படுத்துவது அரசின் முக்கிய குறிக்கோள்.
* அனைத்து கிராமங்களிலும் தொலைத் தொடர்பு வசதி செய்து தரப்படும்.