2026ம் ஆண்டு இந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2 மடங்கு உயர வாய்ப்பிருப்பதாக ஆய்வறிக்கை கூறப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் சேர்ந்தவர்கள்தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது அதிகமாக உள்ளனர். இந்நிலையில் தற்போது இந்தியாவில் பொருளாதாரம் முன்னேறி வரும் நிலையில் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தொழிலதிபர்கள் அதிகம் இருப்பதால் லட்சாதிபதிகள் அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கடந்த 2001ம் ஆண்டு 8 லட்சம் லட்சாதிபதிகள் இருந்த நிலையில் 2026ம் ஆண்டு அது 16 லட்சம் என இரட்டிப்பாகும் என்று ஆய்வுகள் கருத்து தெரிவித்துள்ளன. தற்போது உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்திய தொழிலதிபர் அதானி உள்ளார்.