மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நல குறைவால் உயிரிழந்தார் – தலைவர்கள் இரங்கல்!

Filed under: இந்தியா |

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் அண்மையில் அனுமதித்தனர். பின்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் உயிரிழந்துவிட்டார் என அவருடைய மகன் சிராக் பஸ்வான், சமூக வலை தளத்தில் தெரிவித்தார்.

1946அம ஆண்டு பீஹார் மாநிலத்தின் ககாரியா மாவட்டத்தில் பிறந்த ராம்விலாஸ் பஸ்வான், 8 முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

இவருடைய மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்பட அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.