23 வயது மகனை அடித்தே கொன்ற தாய்!

Filed under: சென்னை |

பெற்ற தாயே தனது 23 வயது மகனை இரும்பு கம்பியால் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மதுரவாயலைச் சேர்ந்த செல்வி 38 வயது பெண்ணுக்கு 23 வயதில் பூவரசன் என்ற மகன் இருந்தார். அடிக்கடி செல்வி மன அழுத்ததால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று திடீரென மன அழுத்தம் ஏற்பட்ட செல்வி தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் பூவரசனை இரும்பு கம்பியால் அடித்தே கொலை செய்துள்ளார். இதையடுத்து அவர் தன்னையே இரும்பு கம்பியால் தாக்கிய நிலையில் மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். யாரோ மர்ம நபர்கள் தாய், மகனை அடித்து விட்டு சென்றதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது தாய் செல்வியே தனது மகனை அடித்து கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் இருக்கும் அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.