24 விரல்களுடன் பிறந்த குழந்தை!

Filed under: இந்தியா |

பிறந்த ஒரு குழந்தைக்கு 24 விரல்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் நிஜாமாத் மாவட்டடத்தில் வசிக்கும் ராவளிக்கு சில நாட்களுக்கு முன்பு பிரசவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் கை மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என மொத்தம் 24 விரல்களுடம் பிறந்துள்ளதாகவும் அக்குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர். இதனால் குழந்தையின் பெற்றோர் சாகர் மற்றும் ரவளி மகிழ்ச்சியுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த அதிசயக் குழந்தையை அந்த ஊரிலுள்ள மக்கள் பார்க்க குவிந்துள்ளனர். இப்படிப் பிறப்பது அரிது என்று எல்லோரும் பார்த்து வருகின்றனர்.