25 நாளில் ரூ.50 கோடி வசூலித்தது ராஜா ராணி: அதிகாரபூர்வ தகவல்

Filed under: சினிமா |

23445320.cmsஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜாராணி 25 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஷங்கர் உதவியார் அட்லீ டைரக்ட் செய்த படம். ராஜாராணி படம் 25 நாளில் 50 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து படத்தின் மக்கள் தொடர்பாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: ராஜாராணி வெளியாகி 25வது நாள்வரையில் 50 கோடி வசூலித்துள்ளது. இது இந்த ஆண்டு வெளியான படங்களில் இது மூன்றாவது இடமாகும். தொடர்ந்து பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

மும்பையில் நடைபெற்று வரும் 15வது திரைப்பட விழாவில் ராஜாராணி நாளை (அக்டோபர் 24) திரையிடப்படுகிறது. ராஜாராணியின் வெற்றிக்கு ரஜினி, கமல், இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.