2500 திரைகளில் ரிலீஸ்!

Filed under: சினிமா |

ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சரவணா ஸ்டோர் அதிபர் சரவணன் மற்றும் ஊர்வசி ரௌட்டாலா நடிப்பில் உருவான திரைப்படம் “தி லெஜன்ட்.” இப்படம் தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகிறது.

மிக பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் பைனான்சியருமான அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றி ரிலீஸ் செய்ய உள்ளது. இந்நிலையில் படம் ஜூலை 28ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பேன் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் 2500 திரைகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் 800 திரைகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக அண்ணாச்சியின் படம் ரிலீஸ் ஆவது திரைத்துரையினருக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.