பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 28,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பெரு நிறுவன முதல் சிறு நிறுவனம் வரை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துன், பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பள குறைத்தும், நிறுவனங்களை மூடியும் வருகின்றனர்.
இந்த வைரசால் அமெரிக்காவில் இயங்கி வரும் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காக்களும் முடங்கி உள்ளது. இதனால் அந்த நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இதைப் பற்றி பொழுதுபோக்கு பூங்கா பிரிவு தலைவரான ஜாஷ் டி அமாரோ வெளியிட்ட செய்திக் குறிப்பில்; மிகவும் இவருத்தத்துடன் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் அறிவிப்பை வெளியீட உள்ளேன். மேலும், அமெரிக்காவில் உள்ள டிஸ்னி பூங்காக்களில் வேலை பார்க்கும் 28 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.