20,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுக்கும் – நிசான் கார் நிறுவனம்!

Filed under: உலகம் |

கொரோன வைரஸால் ஏற்பட்ட வர்த்தக இழப்பை தொடர்ந்து 20 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய நிசான் கார் நிறுவனம் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் நாட்டை தலைமையாக கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கும் நிறுவனம் நிசான். இந்த நிறுவனம் சென்ற மூன்று ஆண்டுகளாக கடும் வர்த்தக வீழ்ச்சியை பார்த்து வருகிறது.

இதனால் 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக நிசான் நிறுவனம் சென்ற ஜூலை மாதம் தெரிவித்தது.

இப்போது கொரோனா வைரஸால் வணிகம் பாதிக்கப்பட்டதால் தற்போது 20 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.