3 முன்னணி நடிகர்களை இணைக்கும் முயற்சியில் கௌதம் மேனன்!

Filed under: சினிமா |

2006ம் ஆண்டு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான “வேட்டையாடு விளையாடு” திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இத்திரைப்படம் டிஜிட்டலில் உருவாக்கம் செய்யப்பட்டு நேற்று கிட்டத்தட்ட 70 திரைகளில் ரிலீசானது. நேற்று புதுப்படங்கள் 7 ரிலீசான நிலையிலும் இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர் கௌதம் மேனன் திரைப்படத்தின் சக்ஸஸ் மீட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் “விரைவில் “வேட்டையாடு விளையாடு 2” திரைப்படத்துக்கான வேலைகள் தொடங்கும். கமல் சாரிடம் இது குறித்து பேச உள்ளேன். எனது போலீஸ் கதாபாத்திரங்களான சூர்யா நடித்த அன்பு செல்வன், அஜீத் நடித்த சத்யதேவ் மற்றும் கமல்ஹாசன் நடித்த ராகவன் ஆகிய கதாபாத்திரங்களை இணைத்து ஒரு படத்தில் கொண்டுவரும் விதமாக ஒரு திட்டம் உள்ளது” என கூறியுள்ளார். கௌதம் மேனனின் இந்த அப்டேட் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் முழுதாக இதற்கான முயற்சியோடு திரைப்படம் திரையிட வரும்போதுதான் தெரியும்.