வந்தே பாரத் திட்டதால் இதுவரை வெளிநாட்டில் இருந்து 3.86 லட்சம் பேர் மீட்பு!

Filed under: இந்தியா |

வந்தே பாரத் திட்டதால் விமானம் மூலம், வெளிநாட்டில் இருந்து இதுவரை மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 80 பேர் மீட்டு வந்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கி கொண்ட இந்தியர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதனால், கடந்த மே மாதம் 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை, மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 80 பேர் பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டன. இதற்காக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் உபயோகப்படுத்தப்பட்டு உள்ளது.