அமெரிக்காவில் சிக்கி தவித்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்பு!

Filed under: உலகம் |

கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் இந்தியர்கள் சிக்கிக் கொண்டன.

தற்போது அமெரிக்காவில் சிக்கி தவித்து கொண்டிருந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வந்தன.

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரிலிருந்து புறப்பட்ட சிறப்பு விமானத்திற்கு பயணிகள் பதிவு செய்தாலும் பயணச் செய்வதற்கு முக்கியத்துவம் வகையில் 329 பேர் மட்டும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் நியூயார்க்கில் இருந்து டெல்லி, சண்டிகர்,பெங்களூருவுக்கு இரண்டு விமானங்கள், சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூரு, கொச்சி, ஐதராபாத் அகமதாபாத்துக்கு இரண்டு விமானங்கள். சிகாகோவில் இருந்து டெல்லி உள்பட நகரங்களுக்கு இரண்டு விமானங்கள். வாஷிங்டனில் இருந்து பெங்களூரு மற்றும் அகமதாபாத்துக்கு ஒரு விமானம் இயக்கப்பட உள்ளது.