மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்குவங்க மாநிலத்தில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் 368 கிராம பஞ்சாயத்து இடங்களில் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்குவங்க மாநிலத்தில் ஜூலை 8ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் வாக்குப்பதிவின் போது பயங்கர வன்முறை நிகழ்ந்ததாக கூறப்பட்டது. இவ்வன்முறையில் 20 பேர் பலியாகி உள்ளதாகவும் 45க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மொத்தம் உள்ள 63 ஆயிரம் கிராமத்து கிராம பஞ்சாயத்து இடங்களில் 368 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை முன்னிலையில் வகிக்கிறது என்றும் பாஜக 150 இடங்களிலும் காங்கிரஸ் 20 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.