ஜம்மு காஷ்மீர் எல்லையில் மூன்று தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்!

Filed under: இந்தியா |

ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சோபியானின் சுகன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் அறிந்த இந்தியா பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை தேடும் பணியை துவங்கியுள்ளனர்.

அந்த சமயத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மற்றும் இந்தியா பாதுகாப்பு வீரர்கள் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்த துப்பாக்கி சூட்டில் காலை இரண்டு பேரும், தற்போது ஒருவரும் ஆக மூவரையும் பாதுகாப்பு வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.