மத்திய அரசு இனி 4ஜி போன்கள் தயாரிப்பை நிறுத்தப்போவதாக வெளியிட்டுள்ள தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது.
தற்போது இந்தியா முழுவம் 4ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது. நாடு முழுவதும் மக்கள் இதற்கான 4ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் 4ஜியை விட அதிகமான இணைய வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றை சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 5ஜி சேவைகளை தொடங்கி வைத்த நிலையில் தீபாவளி முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதற்கேற்ப 5ஜி ஸ்மாட்போன்களும் சந்தையில் நிறைய அறிமுகமாகி வருகிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதால் 3ஜி, 4ஜி ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வதை நிறுத்துமாறு அரசு உத்தரவிட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய அரசு 5ஜி சேவைகளால் ஸ்மார்ட்போன் தயாரிப்புகளுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. அப்படி வெளியாகும் தகவல்கள் உண்மையானவை அல்ல என உறுதி செய்துள்ளது.