4 நாட்களுக்கு பின் வயநாடு நிலச்சரிவில் உயிருடன் 4 பேர் மீட்பு!

Filed under: இந்தியா |

4 பேர் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி 4 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவத்தின் உதவியுடன் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இன்று 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். வடவெட்டி குன்று அருகே 2 பெண்களும், 2 ஆண்களும் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்களை மீட்டு ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் அழைத்து சென்றனர். தற்போது நால்வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வடவெட்டி குன்று பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள் அடித்து செல்லப்பட்டதாகவும், சகதிகள் முழுவதும் மூடி இருந்தாலும் சுவாசிக்கும் அளவிற்கு காற்று இருந்ததால் 4 பேர் உயிர் பிழைத்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வடவெட்டி குன்று பகுதியில் தொடர்ந்து மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சிலர் மீட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.