அசாம் மாநிலத்தின் தென் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி!

Filed under: இந்தியா |

அசாம் மாநிலத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20 பேர் வரை பலியாகியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தென் அசாமில் இருக்கும் பாரத் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த நிலச்சரிவுவில் கச்சார் மாவட்டத்தில் 7 பேர், ஹைலாகண்டி மாவட்டத்தில் 7 பேர், கரீம்கஞ்ச் மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசு வட்டாரங்கள் கூறுகிறது.

இதனால் பலரும் நிலச்சரிவில் படுகாயமும் மற்றும் சிலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை அறிந்த மீட்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர்.