40 கோடி டுவிட்டர் பயனாளிகளின் தகவல் திருட்டு!

Filed under: இந்தியா,உலகம் |

டுவிட்டரில் சுந்தர் பிச்சை உள்ளிட்ட 40 கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடு போய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகவல் டுவிட்டர் பயனாளர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டுவிட்டர் பயனாளர்களின் முக்கிய தகவல்களை ஹேக்கர்கள் திருடி உள்ளதாகவும் அதனை வைத்து அவர்கள் பேரம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்பட பல பிரபலங்களின் பெயர் முகவரி தொலைபேசி எண் இ-மெயில் முகவரி உள்பட பல்வேறு தனிப்பட்ட தகவல்கள் கையில் சிக்கி உள்ளதால் நிறுவனம் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து டுவிட்டர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் தெரிவித்து வருகின்றனர்.