சமீபத்தில் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் வெளியானது.
தேனி மாவட்டம் கம்பம் கிளப் ரோடு மணி நகரத்தில் குடியிருக்கும் கண்ணன் மகன் ஜெயாவர்மன் (வயது 17) கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அவர் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 494 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். நேற்று மாணவன் வீட்டில் தனியாக இருந்த பொழுது தனது வீட்டின் மூன்றாவது மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். வெகு நேரமாக வீட்டில் ஆள் இல்லாததால் உறவினர்கள் மாணவனை தேடிப் பார்த்த பொழுது மாடியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய மாணவனை பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.