5ஜி அலைக்கற்றை ஏலத்தை கைப்பற்றிய ஜியோ!

Filed under: இந்தியா |

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நிறைவடைந்துள்ளது. அதன்படி ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நிறைவடைந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் 4ஜி சேவைகள் பிரபலமானதால் இதன் அதிவேக இணைய வசதிக்கு ஏற்ப சந்தையில் குறைந்த விலையிலிருந்து அதிக விலை வரையிலான 4ஜி ஸ்மார்ட்போன்களும் விற்பனையாகிறது. இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. அவ்வகையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைக்கான ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதன்படி 5 ஜி அலைக்கற்றை ஏலம் நேற்று தொடங்கியது. ஜியோ, ஏர்டெல், வேடோபோன் ஐடியாவுடன் அதானி நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்றன. அலைக்கற்றையை கைப்பற்றும் முனைப்பில் முன்னணி நிறுவனங்கள் மும்முரமாக உள்ளன.

ஏலத்தின் மூலம் மத்திய அரசுக்கு ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். இதில், 4 நிறுவனங்களும் ரூ.21,800 கோடி வரை முன்பணம் செலுத்தியுள்ளன. ரிலையன்ஸ் ரூ.16,000 கோடியும், ஏர்டெல் ரூ.5,500 கோடியும், வோடபோன் ரூ.2,200 கோடியும், அதானி டேட்டா நிறுவனம் ரூ.100 கோடியும் முன்பணம் செலுத்தியுள்ளது. 5ஜி அலைக்கற்றை ரூ.1,50,173 கோடிக்கு ஏலம் நிறைவடைந்துள்ளது. 7 சுற்றுகளாக நடந்த ஏலம் முடிந்த நிலையில் ஜியோ அதிகளவில் 5ஜி அலைக்கற்றையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க அளவு 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதானி குழுமம் குறைந்த அளவில் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்துவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.