மத்திய அமைச்சரவையில் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை செயல்படுத்த ஏலத்திற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
குறைந்த விலையில் அதிக விலை வரையிலான ஸ்மார்ட் போன்களை 4ஜி தொழில்நுட்பத்தில் விற்பனையாகி வருகின்றன. இந்தியாவில் 5 ஜி சேவையை அறிமுகப்படுத்த நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரமாக காத்திருக்கின்றன. ஆன்லைன் சந்தைகளில் 5ஜி தொழில்நுட்பத்துடன் ஸ்மார்போன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் குறித்து மத்திய அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனையில் 72,097.85 மெகா ஹெர்ட்ஸ் (72 ஜிகா ஹெர்ட்ஸ்) அலைக்கற்றைக்கான ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 5ஜி அலைக்கற்றையின் வேகமானது 4ஜியை விட 10 மடங்கு அதிகமானதாக இருக்கும் என்பதால் இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகமாவதில் பலரும் நன்மையடைவர்.