5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், புதுவை மற்றும் காரைக்கால் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.