ஆறு பேர் அமர்ந்து பயணம் செய்யும் வகையில் பேட்டரி வாகனத்தை வடிவமைத்துள்ள இளைஞரை பிரபல கார் நிறுவன தலைவர் பாராட்டியுள்ளார்.
முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திராவின் தலைவர் ஆனத் மகிந்திரா. புதுமை விரும்பி மற்றும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களை கண்டறிந்து பாராட்டும் பண்புடையவர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், தன் டுவிட்டர் பக்கத்தில், 6 பேர் அமரும் வகையில், ஒரு இருசக்கர வாகனத்தை உருவாக்கிய இளைஞரின் கண்டுப்பிடிப்பு மற்றும் திறமையை பாராட்டியுள்ளார். மேலும், இது கிராமங்களின் சிறந்த போக்குவரத்து வசதி என்றும் எங்கு தேவயுள்ளதோ அங்கு தேவை கண்டுபிடிப்புகளின் தாய் என்று குறிப்பிட்டு, வீடியோவை பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.