இந்தியாவில் தொற்றில் இருந்து குணமடைவோர் விகிதம் 58 சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்!

Filed under: இந்தியா |

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைவோர் விகிதம் 58 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிய மத்திய அமைச்சர் மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூறியது: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில் மூன்று லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் இறப்பவர்கள் விகிதம் 3 சதவீதமாக உள்ளது அதும் இந்தியாவில் குறைவாக உள்ளது.

கொரோனாவில் குணமடைவோர் விகிதம் 58 சதவீதம் உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும் நாட்கள் 19 ஆக குறைவாக உள்ளது குறைந்துள்ளது.

மேலும் கடந்த 20 மணி நேரத்தில் இந்தியாவில் 18 ஆயிரத்து 552 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.