6 மணி நேரத்தில் 24 முட்டையா?

Filed under: இந்தியா |

கோழி வளர்ப்பு நிபுணர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது கேரள மாநிலத்தில் உள்ள ஒருவரது கோழி.

இந்த அதிசய கோழி கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியைச் சேர்ந்த பிஜு என்பவருடையது. இவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20க்கும் மேல் தீஸ்-380 வகையைச் சேர்ந்த கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளார். அதில் சின்னு என பெயரிடப்பட்டுள்ள ஒரு கோழி காலை சுமார் 8.30 மணியில் இருந்து மதியம் 2.30 மணி வரை 24 முட்டைகளை போட்டுள்ளது. கோழி வளர்ப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த சம்பவம் ஒரு அரிய சாதனை என கூறுகின்றனர். இத்தகவல் அறிந்த பலரும் சின்னு கோழியை காண குவிந்துள்ளனர். அதிசய கோழி என சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.