66-வது குடியரசு தின விழா: தமிழக ஆளுநர் கே.ரோசய்யா தேசியக் கொடியேற்றினார்

Filed under: இந்தியா,தமிழகம் |

ch1_2290409g66-வது குடியரசுத் தினத்தையொட்டி சென்னை மெரினாவில் ஆளுநர் கே.ரோசய்யா தேசியக் கொடியை ஏற்றினார்.

முன்னதாக விழாவுக்கு வருகை தந்த ஆளுநரை முப்படை தளபதிகளும், தமிழக முதல்வரும் வரவேற்றனர்.

சென்னை மெரினாவில் காந்தி சிலை அருகே நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படையின் அணிவகுப்பை ஆளுநர் ரோசய்யா ஏற்றுக் கொண்டார்,

கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து வீர, தீர சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கப்பட்டது. மாணவி, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசியக் கொடியேற்றினர்.

சென்னை துறைமுகத்தில், துறைமுகத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், நிலைய இயக்குநர் சுந்தர் தேசியக் கொடியை ஏற்றினார்.