தாய்வான் நாட்டில் 7.5 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: ஜப்பான் தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள். கட்டிடங்கள் இடிந்து சேதம்.

Filed under: உலகம் |

தாய்வான் நாட்டில் 7.5 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்: ஜப்பான் தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள். கட்டிடங்கள் இடிந்து சேதம்.

நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா தீவை குறிப்பிட்டு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் அளவிற்கு சுனாமி அலை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த கடுமையான நிலநடுக்கத்தால் தைவானில் கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தைவானின் தலைநகர் தைபேயிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.