தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

Filed under: தமிழகம் |

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கைளை ஆய்வு செய்த பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது; கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் நன்றாக செயல்பட்டு வருகிறது எனவும் மாவட்டத்துக்கு ஒரு சித்த மருத்துவ மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் பின்பு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்பட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையை அமைச்சர் தொடங்கி வைத்தார்.