வானிலை ஆய்வு மையம் வங்கக்கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. சற்றுமுன் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிகையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதேபோல் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுகின்றனர்.