கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் திறப்பதற்கு கால தாமதமாகலாம் என்று பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தற்போது முடியும் நிலையில் இருக்கிறது. 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்குப் பள்ளி இறுதி தேர்வு முடிந்து, 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்காக விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக ஜூன் மாதம் இறுதியில்தான் பள்ளிகள் திறக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.