அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தோட்டக்கலை துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மலர் கண்காட்சியை துவக்கி வைக்க உள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மலர் கண்காட்சி நடைபெற இருக்கின்றது. தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்க்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் ஏராளமான மலர்கள், மலர்களால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. மலர்க் கண்காட்சி நாளை முதல் 5ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சியில் ரூ.20ம், பெரியவர்களுக்கு ரூ.50ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Related posts:
ஈஷாவில் நவராத்திரி விழா அக்.7-ம் தேதி தொடக்கம்!
13.50 கோடி மதிப்பீட்டில் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன் எம் ...



