1000 மீட்டர் உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்ட திட்டமிட்டுள்ளது. இக்கட்டிடம் புர்ஜ் கலீபாவை விட உயரமானது.
500 பில்லியன் டாலர் செலவில் சவுதி அரேபியாவில் புதிய கட்டிடம் ஒன்றை கட்ட திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. துபாயிலுள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில் உள்ளது. மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடம் இதுவே என்ற பெருமை இக்கட்டிடத்திற்கு உண்டு. ஆனால், இதைவிட உயரமாக ஜித்தா கோபுரம் என்ற கட்டிடத்தை சவுதி அரேபியா உருவாக்கி வருகிறது. இக்கட்டிடம் 1000 மீட்டர் உயரத்தில் 167 மாடிகள் கொண்டு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது.