நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை; அச்சத்தில் மக்கள் – மீண்டும் 12 நாட்கள் ஊரடங்கு!

Filed under: உலகம் |

நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவ துவங்கியதால், அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஊரடங்கு உத்தரவு 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். முன் எச்சரிக்கை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது மற்றும் தேவைகள் தவிர வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.

தற்போது நியூசிலாந்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்தில் 1,609 பேர் பாதிக்கப்ட்டுள்ளார் மற்றும் 22 பேர் பலியாகியுள்ளனர்.

இதை பற்றி நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் கூறியது; கொரோனா வைரஸ் மீண்டும் எப்பிடி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால், சரியான தகவல் தெரியவரவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 29 பேரும் ஆக்லாந்தில் இருந்து வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் நியூசிலாந்தில் 12 நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது என பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்