நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் 169வது படத்துக்கு ‘ஜெயிலர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்தை பற்றிய அறிவிப்பை நாளை காலை 11 மணிக்கு வெளியிடப் போவதாக அறிவித்தது. குறிப்பாக குறிப்பாக சிவராஜ் குமார் இப்படத்தில் இணைந்ததை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கும் என்று கூறப்பட்டது. ரஜினிகாந்த்தின் 169 படத்தின் தலைப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது படத்திற்கு ‘ஜெயிலர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். “பீஸ்ட்” படத்தில் ஏற்பட்ட சறுக்கலிலிருந்து நெல்சனுக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.