வணிகர்கள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று ஏற்பாடு என்ன செய்வது என்ற முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்துள்ளது.
மத்திய அரசு ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து விதமான ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று அறிவித்திருந்தது. அதன்படி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் விற்பனைக்கு இன்று முதல் தடை அமலுக்கு வருகிறது. இதையடுத்து ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த வணிகர்கள் அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். குறிப்பாக குளிர்பானங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக காகித ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.