டில்லியில் குடோன் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டில்லியில் அலிபூர் என்ற இடத்தில் உள்ள குடோனின் சேமிப்புக்கிடங்கில் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கயுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.