மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தில் உள்ள பிவண்டி பகுதியில் மூன்று மாடி கட்டிடம் 21ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த கட்டிடத்தில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் விபத்தில் மாட்டி கொண்டனர். இந்த விபத்தை பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு வேலையை மேற்கொண்டனர். முதல் அன்று 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக மீட்பு வேலைகள் நடந்து வரும் சூழ்நிலையில், இந்த கட்டிட விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மீட்பு வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.