உத்தரகாண்ட் மாநிலத்தில் மனைவியை 72 துண்டுகளாக வெட்டிய கணவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உள்ளது நீதிமன்றம். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2010ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூன் என்ற பகுதியில் மனைவியைக் கொன்று அவரது உடலை 72 துண்டுகளாக குலாட்டி என்பவர் வெட்டியுள்ளார். இவருக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது. இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் தண்டனை பெற்று வரும் குலாட்டிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்காக இடைக்கால ஜாமின் வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் 45 நாட்கள் இடைக்கால ஜாமின் அளித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.