இஸ்ரோ சாதித்துவிட்டீர்கள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் !!
பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பிஎஸ்எல்வி-சி49/ஈஓஎஸ்-01 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ மற்றும் இந்திய விண்வெளித் தொழில் துறையை நான் வாழ்த்துகிறேன். கொவிட்-19 காலகட்டத்தில், குறித்த காலத்துக்குள் இதை செய்து முடிப்பதற்காக பல்வேறு சவால்களை நமது விஞ்ஞானிகள் எதிர்கொண்டார்கள்.
அமெரிக்கா மற்றும் லக்சம்பர்கில் இருந்து தலா நான்கு மற்றும் லித்துவேனியாவிலிருந்து ஒன்று உட்பட ஒன்பது செயற்கைக்கோள்கள் இந்த திட்டத்துடன் ஏவப்பட்டுள்ளன,” என்று பிரதமர் கூறியுள்ளார்.
Related posts:
பெங்களூருவை அடுத்த மத்துரம்மா கோயிலின் வருடாந்திர ரத யாத்திரையின் போது 120 அடி உயர தேர் சாய்ந்து விப...
கோயிலுக்குள் நுழைந்த தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்!
ராகுல் காந்தி, முதலமைச்சருக்கு சம்மன்..!
உத்திர பிரதேசத்தில் பேருந்து விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம் - யோகி ஆதித்யநாத் ...


