இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதான அனைவரும் இலங்கையிலுள்ள திரிகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் இன்னும் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.