திமுக பிரமுகர் ராஜிவ்காந்தி நீட் தேர்வு என்பது சமூக அநீதி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளதாக கூறியுள்ளார்.
நீட் தேர்வு முறை வேண்டாம் என்பது பற்றி தமிழ் நாடு முன்வைத்துள்ள வாதம் சரியானது. சாதி அதிகளவில் உள்ள இந்தியாவில் 63% ஓபிசி, எம்பிசி மக்கள், பிசி மக்கள், 23% அட்டவணை சாதி மக்கள், மீதி 15% முன்னேறிய மக்கள், 9% உயர்சாதியினர். இத்தனை பாகுபாடுகள் இருந்தாலும் கல்வியில் முன்னேறியுள்ளது தமிழ் நாடு. இந்த நீட் தேர்வில், 21 லட்சம் பேரில் 10 லட்சம் பேர் ஓபிசி, பிசி, எஸ்.சி.எஸ்டி மாணவர்களும் 9 லட்சம் பேர் உயர்சாதியினரும் தேர்வு எழுதினர். இதில், பார்வர்ட் சாதியினர் 8.83 லட்சம் பேர் தேர்வு பெற்றுள்ளனர். ஆனால், 10 லட்சம் பேர் எழுதியதில் 1லட்சம் பேர் கூட தேர்ச்சிபெறவில்லை எனத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தோல்வி காரணமாக நேற்று மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நீட் தேர்வினால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.