“மிஸ் தமிழ்நாடு” பட்டத்தை செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் வென்றுள்ளதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ’மிஸ் தமிழ்நாடு அழகி போட்டியில் தமிழகத்திலிருந்து ஏராளமான அழகிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் செங்கல்பட்டை சேர்ந்த கட்டிட தொழிலாளியின் மகள் ரக்சயா என்பவர் மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தனது பெற்றோர் வறுமையாக இருந்த சூழ்நிலையிலும் பகுதி நேரமாக வேலை செய்து சொந்த முயற்சியில் அழகி போட்டிக்காக தன்னை தயார் படுத்தி வந்த ரக்சயாவுக்கு தற்போது மிஸ் தமிழ்நாடு பட்டம் கிடைத்துள்ளது.